'ராஜாராணி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். 'பிகில்' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர்அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். இது பாலிவுட் திரையுலகில் அட்லீயின்அறிமுகப் படமாகும். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அட்லீ இயக்கும் இப்படத்தில்ஷாருக்கானுடன்யோகி பாபு இணைந்து நடிக்கவுள்ளார். சமூக வலைதளத்தில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த யோகிபாபு ஷாருக்கானுடன் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இப்படத்தில் நடிப்பதன் மூலம் யோகி பாபு பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
Yes
— Yogi Babu (@iYogiBabu) May 3, 2022