Advertisment

குரங்கு, பன்றியைத் தொடர்ந்து பறவையுடன் டூயட் பாடும் யோகிபாபு 

பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே காமெடி கலந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்கிறார்.

Advertisment

yogibabu

மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா குரேஷி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த "காக்டெயில்" என்கிற பறவையும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த படத்தில் யோகி பாபு நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளது "காக்டெய்ல்" குழு. யோகிபாபு தற்போது குரங்குடனும், பண்றியுடனும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

yogibabu cocktail
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe