/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/285_20.jpg)
வடிவேலுவின் ‘இம்சை அரசன் 23.ம் புலிகேசி’, விஜய்யின் ‘புலி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சிம்பு தேவன். இவர் தற்போது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு யோகி பாபுவை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘போட்’. இப்படத்தில் கௌரி ஜி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபா பிரேம்குமார் மற்றும் சி.கலைவாணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க இப்படம் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது. அதன் பிறகு படத்திலிருந்து ‘சோக்கா நானும் நிக்குறேன்...', ‘தகிட ததிமி...’ என்ற இரண்டு பாடல்கள் வெளியானது. இதையடுத்து யோகிபாபுவின் பிறந்தநாளான கடந்த ஜூலை 22ஆம் தேதி ‘வாடா வா..’ என்ற புரொமோ பாடல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி யூடியூப்பில் 3 லட்சம் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. ட்ரைலரில், கடந்த 1943ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் மதராஸ் மாகாணத்தில் மீது ஜப்பான் போர் விமானங்கள் குண்டுகளை வீசுகிறது. அந்த காலகட்டங்களில் இப்படத்தின் கதை தொடங்குகிறது.
இந்நிலையில் அங்கிருந்து யோகிபாபுவின் படகில் ஏறி சில நபர்கள் கடலில் தப்பி செல்வது போலவும் அவர்கள் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களை போலவும் காட்சிப்படுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து அந்த படகில் பயணிப்பவர்களுக்கு இடையில் ஒருவருக்கொருவருடன் வாக்குவாதம் ஏற்படுகிறது. அதே சமயம், படகில் ஓட்டை விழுந்து கடல் நீர் உள்ளே வருகிறது. பின்பு அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை காமெடி கலந்து விறுவிறுப்புடன் சொல்லியிருப்பது போல் தெரிகிறது. சர்வைவல் ட்ராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)