'கதை, திரைக்கதை, வசனம்' - புது அவதாரம் எடுத்த யோகிபாபு

yogi babu written story, screenplay and dialogue for his next movie

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து கொண்டு வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து 'காண்டிராக்டர் நேசமணி' மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் யோகிபாபு, ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி அதில் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை 'வில் அம்பு' படத்தை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியம் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அமீர் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான 'யோகி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான யோகிபாபு தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வந்தார். தன் டைமிங் காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த யோகிபாபு பின்பு கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இதனை தொடர்ந்து தற்போது புது அவதாரம் எடுத்துள்ள யோகிபாபுவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

actor yogi babu
இதையும் படியுங்கள்
Subscribe