தூய்மை பணியாளராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் யோகிபாபு

Yogi Babu, who creates awareness as a cleanliness worker

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கில்' உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து 'காண்ட்ராக்டர் நேசமணி' மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' உள்ளிட்ட சில படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்', விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் 'வாரிசு' படங்களில் நடிக்கிறார். இது போக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிகுப்பைகளை தரம் பிரித்து அளிப்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் குப்பைகளைச் சேகரித்து வரும் உர்பேசர் ஸ்மித் (urbaser sumeet) என்ற தனியார் நிறுவனம் சார்பில்குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அந்தக் குறும்படத்தில் நடிகர் யோகிபாபு, தூய்மை பணியாளராக நடித்துள்ளார். தூய்மை பணியாளராக வீடு தோறும் சென்று தரம் பிரித்து குப்பைகளைச் சேகரிக்கும் காட்சியில் யோகிபாபு நடித்துள்ளார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகிபாபு இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது தொடர்பாக ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

actor yogi babu chennai corporation
இதையும் படியுங்கள்
Subscribe