yogi babu transformation video

தமிழில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து வரும் யோகிபாபு தற்போது ஆர்.கண்ணன் இயக்கும்படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து 'காண்டிராக்டர் நேசமணி' மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' உள்ளிட்ட சில படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

மேலும், ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்', பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்திலும் நடிக்கிறார். தமிழ், இந்தியை தொடர்ந்துதெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பெயரிடாத படத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். அதோடு விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

Advertisment

இந்நிலையில் தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சில் ஈடுபட்டு வருகிறார் யோகிபாபு. இதற்காக கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்கிறார். அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.