Advertisment

யோகி பாபுவுக்கு கை கொடுக்க மறுக்கும் அர்ச்சகர் - வைரலாகும் வீடியோ

yogi babu temple video

தமிழைத்தாண்டி இந்தியில் 'ஜவான்', மலையாளத்தில் 'குருவாயூர் அம்பல நடையில்', தெலுங்கில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் யோகிபாபு. இதனிடையே ஹீரோவாக ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடிக்கிறார். மேலும், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில், முருகன் மீது தீவிர பக்தியுடைய யோகிபாபு அடிக்கடி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவார். அந்த வகையில் கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார். அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

அதில் அவருடன் பக்தர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அப்போது அர்ச்சகர் ஒருவரிடம் யோகி பாபு சென்று கை கொடுக்கிறார். ஆனால் அந்த அர்ச்சகர் கை கொடுக்க மறுத்து ஆசீர்வதிப்பது போல் கையை காண்பிக்கிறார். உடனடியாக யோகி பாபு, அவரைக் கிண்டல் செய்வது போல் சமாளிக்கிறார். இந்த வீடியோவிற்கு கீழ், பலரும் தீண்டாமைக் கொடுமை என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பலர் அந்த அர்ச்சகருக்கு எதிராக தங்களது கண்டனங்களைத்தெரிவித்து வருகின்றனர்.

actor yogi babu MURUGAN TEMPLE
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe