Advertisment

யோகி பாபு மீது புகார்

yogi babu producer money fraud issue

சென்னை வளசரவாக்கம் பகுதியில் 'ரூபி பிலிம்ஸ்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் முகமது ஹாசிர். வண்டி, கன்னிமாடம், மங்கி டாங்கி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் யோகி பாபு மீது ஹாசிர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரில், கடந்த 2020ஆம் ஆண்டு 'ஜாக் டேனியல்' என்ற தலைப்பில் ஒரு படத்தை தொடங்கியதாகவும் அதில் யோகி பாபுவை நடிக்க வைக்க ரூ. 65 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு முன்பணமாக ரூ. 20 லட்சம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதும் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை என்றும் படப்பிடிப்பிற்காக அழைத்தாலும் வராமல் ஏமாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

பின்பு முன்பணத்தை யோகிபாபுவிடம் கேட்டால் அதைத்திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளதாகவும் ஹாசிர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

actor yogi babu film producer
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe