Advertisment

"கடவுள் ஆசீர்வாதத்தால் கண்டிப்பா எனது ஆசை நடக்கும்" - நடராஜன் விழாவில் யோகி பாபு

yogi babu press meet at natarajan cricket ground launch

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் செயல்படவுள்ள இந்த மைதானத்தின் தொடக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

Advertisment

சிறப்பு விருந்தினராக வருகை தந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவரோடு நடிகர்கள் யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்பு செய்தியாளர்களைச்சந்தித்த யோகி பாபு, "தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்க ஆளில்லாமல்நிறைய விஷயங்கள் நடந்திருக்கு. அது காலம் காலமாக நடந்துக்கிட்டு வருவது தான். ஆனால் இப்போது முதல் முறையாக நடராஜன் வளர்ந்து வர கிரிக்கெட் வீரர்களுக்கு பெரிய சப்போர்ட் பண்ணியிருக்கார். இதன் மூலம் நிறைய வீரர்கள் வரவேண்டும் என்பது எனது ஆசை.

Advertisment

இந்த மைதானத்தை பார்க்கும் போது நாமும் இதுபோன்று ஒரு மைதானம் உருவாக்கி நிறைய பேரை உருவாக்கணும்னுதோன்றுகிறது. கண்டிப்பா இந்த ஆசை கடவுள் ஆசீர்வாதத்தில் நடக்கும் என நம்புகிறேன். நானும் அடுத்ததாக கிரிக்கெட்டை மையப்படுத்தி தான் ஒரு படம் பண்ணவுள்ளேன். அதனை 'பொம்மை நாயகி' பட இயக்குநர் தான் இயக்குகிறார்" என்றார்.

actor yogi babu Natarajan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe