Advertisment

"எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல..." யோகி பாபு படக்குழுவை அவரது ஸ்டைலிலேயே கலாய்க்கும் ரசிகர்கள்!

yogi babu

நிஜத்தில் பேயைப் பார்த்தால்கூட பயம் ஏற்படாமல் சிரிப்பு வருமளவுக்கு எக்கச்சக்க ஹாரர் காமெடி படங்களைக் கடந்த சில ஆண்டுகளில் எடுத்துத் தள்ளியுள்ளது கோலிவுட். இந்த ட்ரெண்ட் தற்போது சற்று ஓய்ந்திருந்தாலும் இத்தகைய ஹாரர் காமெடி படங்கள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேய் மாமா’. மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனை முன்னிட்டு, பேய் மாமா படக்குழு ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது.

Advertisment

போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே அந்தப் போஸ்டர் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான 'பூத்' என்ற பட போஸ்டரின் சாயலில் இருந்ததை ரசிகர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, இரு போஸ்டரையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 'எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல...' என்ற யோகி பாபுவின் வசனத்தை மையமாக வைத்து ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பட வெளியீடு நெருங்குவதால் இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்காமல் படக்குழு மௌனம் காத்துவருகிறது.

Advertisment

actor yogi babu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe