Advertisment

பூமர் அங்கிளான யோகிபாபு

yogi babu, oviya in 'boomer uncle' movie first looked released by sibiraj

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து கொண்டு வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் 'ஏ1', 'பாரீஸ் ஜெயராஜ்', போன்ற படங்களை இயக்கிய ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே அன்பு மற்றும் கார்த்திக் கே தில்லை தயாரிப்பில் ஸ்வதீஸ் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகிபாபுவுடன் இணைந்து ஓவியாவும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளளார். தர்மபிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 'காண்டிராக்டர் நேசமணி' என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியானது.

Advertisment

இந்நிலையில் இப்படத்திற்கு சில காரணங்களால் தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்திற்கு 'பூமர் அங்கிள்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்போஸ்டரை சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்போஸ்டரில் யோகிபாபு கையில் துப்பாக்கியுடனும், ஓவியா சூப்பர் ஹீரோ கெட்டப்பிலும் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

actor yogi babu oviya sibiraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe