/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/495_3.jpg)
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து கொண்டு வருபவர் யோகிபாபு. இவர் கதாநாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளியான 'மண்டேலா' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனிடையே மோகன் நடிப்பில் உருவாகிவரும் 'ஹரா', சுந்தர்.சி-யின் 'காஃபி வித் காதல்', ஜீவா நடிக்கும் 'கோல்மால்' உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தை 'ஏ1', 'பாரீஸ் ஜெயராஜ்', போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன் இயக்கி தயாரிக்கிறார். 'மெடிக்கல் மிராக்கல்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் தர்ஷா குப்தா, மன்சூர் அலிகான், நாஞ்சில் சம்பத், மதுரை முத்து உள்ளிட்ட பல பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)