தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு பார்கவி என்ற பெண்ணை கடந்த மாதம் குலதெய்வ கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதில் இவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். அதன்பின் மீண்டும் படப்பிடிப்புகளில் பிசியான அவர் தற்போது கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் 5ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். முன்னதாக கடந்த 21ஆம் தேதி தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தைச் சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைக் கொடுத்தார் யோகி பாபு.