Skip to main content

மலையாளத்தில் என்ட்ரி; முன்னணி நடிகரின் படத்தில் யோகிபாபு

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

yogi babu make his mollywood entry through prithviraj movie

 

தமிழில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து வரும் யோகிபாபு தற்போது ஆர்.கண்ணன் இயக்கும்  படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து 'காண்டிராக்டர் நேசமணி' மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' உள்ளிட்ட சில படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

 

மேலும், ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்', பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்திலும் நடிக்கிறார். தமிழ், இந்தியை தொடர்ந்து  தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பெயரிடாத படத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். 

 

இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் அறிமுகமாகிறார் யோகிபாபு. மலையாளத்தில் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' என்ற வெற்றி படத்தை கொடுத்த விபின் தாஸ் அடுத்ததாக பிரித்விராஜ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு இணைந்து நடித்து வருகிறார். 'குருவாயூர் அம்பல நடையில்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்