yogi babu make his hollywood debut through trap city

திருச்சியை சேர்ந்த இயக்குநர் டெல்.கே.கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் ‘ட்ராப் சிட்டி’. இந்த படத்தில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே ஜென்கின்ஸ், நெப்போலியன், ஜி.வி. பிரகாஷ் குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் இசைத் துறையில் ஒரு இளைஞன் எந்த அளவு தடைகளை சந்திக்கிறான் அதற்காக எவ்வளவு தூரம் போராடுகிறான் என்பதை பின்னணியாகக் கொண்டு த்ரில்லர் கலந்த சஸ்பென்ஸ் ஜானரில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இப்படத்தை இயக்கிய டெல். கே. கணேஷ் தனது கைபா பிலிம்ஸ் பேனரில் தயாரித்தும் உள்ளார். இவர் ஏற்கனவே ஹாலிவுட்டில் டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்(Devil's Night: Dawn Of The Nain Rouge) படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படம் மூலம் நெப்போலியன் ஹாலிவுட்டில் அறிமுகமாகியிருந்தார்.

Advertisment

yogi babu make his hollywood debut through trap city

இதனைத் தொடர்ந்து டெல். கே. கணேஷின் ‘ட்ராப் சிட்டி’ படம் மூலம் ஜி.வி. பிரகாஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் ஹாலிவுட்டில் அறிமுகமாகின்றனர். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. படம் டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகிறது.