yogi babu 'lokalsarakku' first look poster released

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து கொண்டு வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் 'காண்டிராக்டர் நேசமணி' படத்தில் நடித்துள்ளார். அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

Advertisment

அந்த வகையில் யோகிபாபு, நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் ஒரு படம் நடிக்கிறார். 'டிஸ்கவர் ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் இப்படத்தை ராஜ் குமார் என்பவர் இயக்குகிறார். சுவாமிநாதன் ராஜேஷ் என்பவர் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்திற்கு 'லோக்கல் சரக்கு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதோடு வெளியாகியுள்ள போஸ்டரில் யோகிபாபு மற்றும் தினேஷ் மாஸ்டர் இடம்பெற்றுள்ளனர். இதனை சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment