yogi babu joins vijay thalapathy66 film

Advertisment

'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 66 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகாமந்தனா நடித்துவருகிறார். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதைபோன்றுகுடும்ப பின்னணி படமாக உருவாகும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாகஷியாம் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன்இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக விஜய் நேற்று முன்தினம் மீண்டும் ஹைதராபாத் புறப்பட்டுசென்றார்.

இந்நிலையில் தளபதி 66 படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 'தளபதி 66' படத்தின் நடிகர்யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் யோகி பாபு பங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பதிவின்மூலம் உறுதி செய்துள்ளார். விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வஅறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், சர்க்கார், பீஸ்ட் ஆகிய படங்களில் யோகி பாபு நடித்திருந்த நிலையில் தற்போது தளபதி 66 படத்தில் நடிப்பதாக கூறப்படும் செய்து ரசிகர்கள் மத்தியில் மீறும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.