Skip to main content

ஒரே நேரத்தில் தல - தளபதி ரெண்டுபேர் கூடவும் ஷூட்டிங்!

Published on 23/02/2018 | Edited on 23/02/2018

yog


வருகிற மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நான்காவது முறையாக அஜித்தை வைத்து சிவா இயக்கும் இப்படத்திற்கு டி இமான் முதல் முறையாக இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் தற்போது புதுவராவாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் 62-வது படமாக உருவாகும் படத்திலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் இரு முன்னணி நடிகர்கள் படத்தில் யோகிபாபு ஒப்பந்தமாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். இதனால் வரும் தீபாவளிக்கு இரு பெரும் தலைகளின் படங்களிலும் வருவதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் யோகி பாபு.

சார்ந்த செய்திகள்

Next Story

பஸ்ஸில் அடி வாங்கிய யோகி பாபு... பஸ்ஸைத் துரத்திய கோவை மக்கள்!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

கோவையில் நடிகர் யோகிபாபு கலந்து கொண்ட படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான சமபவத்தை அந்தப் படக்குழுவினர் சமீபத்தில் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். கதிரவன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'அவளுக்கென்ன அழகிய முகம்' திரைப்படத்தில் பூவரசு, அனு, பவர் ஸ்டார் சீனிவாசன், யோகிபாபு உள்பட பலரும் நடித்துள்ளனர். கேசவன் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற செப்டெம்பர் 7 அன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் அருகே தெலுங்குபாளையத்தில் நடந்ததாம்.

 

yogi babu



கதைப்படி, ஒரு காட்சியில் பேருந்தில் செல்லும் யோகிபாபு, அங்கு சேட்டை செய்து மக்களிடம் அடிவாங்குகிறார். அந்தக் காட்சியைப் படமாக்கும்பொழுது, ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் ஒருவர் அடிவாங்குவதைப் பார்த்த ஊர்மக்கள் சிலர், ஏதோ பிரச்சனை என்று எண்ணி நான்கைந்து இருசக்கர வாகனங்களில் கிளம்பி பஸ்ஸை பின்தொடர்ந்தனர். பஸ்ஸை நிறுத்துமாறு கத்திக்கொண்டே பின்னே வந்த அவர்கள் ஒரு கட்டத்தில் பஸ்ஸை முந்திச் சென்று நிறுத்தியுள்ளனர். உள்ளே ஏறி 'என்ன பிரச்சனை? ஏன் அடிக்கிறீங்க?' என்று கேட்ட அவர்கள் யோகிபாபுவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கேமராவுடன் அங்குள்ளவர்கள் விளக்கவும் அவர்கள் சிரித்துக்கொண்டே கிளம்பிச் சென்றனர். இந்த சம்பவத்தைப் பார்த்த போலீஸ்காரர்களும் வந்து, படப்பிடிப்பு பொறுப்பாளரிடம், 'இது போன்ற காட்சிகளை ஊருக்கு வெளியே வைத்து எடுங்கள். அனுமதி இருக்கிறது என்பதற்காக அலட்சியமாக இருக்காதீங்க' என்று கூறிவிட்டு சென்றனராம்.