Skip to main content

“யாருமில்லாத மைதானத்தில் விளையாடுகிறேனா?” - யோகிபாபுவை விமர்சித்தவர்களுக்கு விளக்கம்

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகி பாபு பல லட்சங்கள் ஒரு நாளுக்கு சம்பளமாக வாங்குகிறார் என்று பலரால் சொல்லப்படுகிறது. அது குறித்து வெளிப்படையாக தர்மபிரபு ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் யோகி பாபு.
 

yogi babu

 

 

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், ஜனினி ஐயர், ரமேஷ் திலக், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்மபிரபு'. யோகிபாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை போல பிரதான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்து வெளியாக இருப்பது சாம் ஆண்டன் இயக்கத்தில்  ‘கூர்கா’ படம் ஆகும்.
 

யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருக்கிறார். எந்த பெரிய நட்சத்திரம் நடித்திருந்தாலும் அதில் கண்டிப்பாக யோகிபாபு இருக்கிறாரா என்கிற கேள்வி எழுகிற அளவிற்கு முன்னேறியுள்ளார். ஆனால், ஒருசிலர் தற்போது காமெடி நடிகர்களில் ஜாம்பவான்களாக இருந்தவர்கள் யாருமில்லை அதனால்தான் யோகிபாபு வளர்ந்துவிட்டார் என்று விமர்சித்து வந்தார்கள். அவர்களுக்கு இவ்விழா மேடையில் தன்னுடைய விளக்கத்தை தெரிவித்துள்ளார் யோகிபாபு.
 

“என்னைப் பிடிக்காதவர்கள் பலரும் பல விஷயங்கள் சொல்வார்கள். அதெல்லாம் யாரும் கேட்க வேண்டாம். என்னிடம் கேட்டால் மட்டுமே பதில் தெரியும். யாரும் இல்லாத இடத்தை பிடித்துவிட்டார் என்று பேசுவதாகக் கேள்விப்பட்டேன். யாருமே இல்லாத மைதானத்தில் போய் விளையாட முடியாது. அனைவருக்கும் இருந்தால் மட்டும்தான் விளையாடவே முடியும். அப்போது விளையாடினால் மட்டுமே திறமையை வெளிப்படுத்த முடியும். 6 அடிக்கிறேன் என்றால், சரியான அணி கிடைத்தது, அடிக்கிறேன். மேட்ச் ஜெயிக்கிறேன். ஆகையால், மைதானத்தில் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரும்போது வரட்டும். நான் என்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”. இவ்வாறு யோகி பாபு பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழில் பாடகியாக அறிமுகமாகும் மஞ்சு வாரியர்

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Manju Warrier is making her debut as a singer in Tamil

 

இந்தியாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு 'இனம்' படம் வெளியானது. அதன் பிறகு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர்களை வைத்து 'சென்டிமீட்டர்' படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' மற்றும் 'சேவாஸ் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

 

இந்நிலையில் மஞ்சு வாரியார் தமிழில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். 'சென்டிமீட்டர்' படத்தின் 'கிம் கிம்' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் முதலாக தமிழில் இந்த பாடலை மஞ்சு வாரியர் பாடியுள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் சில பாடல்களை பாடியுள்ள மஞ்சு வாரியர் 'கிம் கிம்' பாடலின் மூலம்  தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார். 'கிம் கிம்' பாடலின் மலையாள லிரிக் வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது.  

 

 

  

Next Story

'நான் ராம் இல்லடா... தாகூத் இப்ராஹிம்' - வைரலாகும் மோகன் படத்தின் கிளிம்ஸ்

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

'I am not Ram ... Thakooth Ibrahim' - The glimpse of the Mohan movie goes viral

 

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் 'மோகன்'. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் நடித்து வந்தார். 1999-ஆம் வெளியான 'அன்புள்ள காதலுக்கு' படத்தை இயக்கினார். கடைசியாக தமிழில் 2008-ஆம் ஆண்டு வெளியான 'சுட்ட பழம்' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்தில் சில படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக 'ஹரா' படத்தில் நடித்து வருகிறார். குஷ்பூ, யோகி பாபு, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்டி இசையமைக்கிறார். கோவை எஸ்பி மோகன்ராஜ் தயாரிக்கும் இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்குகிறார்.

 

இந்நிலையில் 'ஹரா' படத்தின் கிளிம்ஸ் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் காட்சியில் மோகன் ஸ்டைலாக தோன்றுகிறார். மேலும், 'நான் ராம் இல்லடா... தாகூத் இப்ராஹிம்' என்று மோகன் பேசும் வசனம் பலரது கவனத்தை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.