Advertisment

மணிரத்னத்துடன் கைக்கோர்க்கும் யோகி பாபு?

Yogi Babu

Advertisment

கரோனா ஊரடங்கு காரணமாக கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ள தமிழ் திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் 'நவராசா' என்ற படத்தை இயக்குனர் மணிரத்னம் தயாரித்து வருகிறார். அவரோடு இணைந்து ஜெயேந்திராவும் தயாரிக்கிறார். ஆந்தாலஜி வகையில் உருவாகும் இப்படத்தை 9 இயக்குனர்கள் இயக்கவுள்ளனர்.

ஒன்பது இயக்குனர்களில் ஒருவராக இருந்த இயக்குனர் பொன்ராம், இப்படத்தில் இருந்து விலக, அவருக்குப் பதிலாக இயக்குனர் பிரியதர்ஷன் இணைந்துள்ளார். இதில், இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர் நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.

manirathnam actor yogi babu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe