தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடியர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் யோகி பாபு. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்ததை பலரும் வரவேற்றிருந்தனர்.

Advertisment

yogi babu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

யோகிபாபுவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. அதனால் பல முன்னணி நடிகர்கள் மேடையிலேயே யோகி பாபுவுக்கு உடனடியாக திருமணம் நடைபெற்றுவிடும் என்று விருப்பங்களை தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் நடிகை ஒருவருடன் யோகி பாபுவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வதந்தி பரவியது. அதனை அடுத்து சம்மந்தப்பட்ட அந்த பெண் யோகிபாபு எனக்கு அண்ணன் போன்றவர். யாரும் இப்படி வதந்தியை பரப்பாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். நடிகர் யோகிபாபுவும் மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Advertisment

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் தனுஷுடன் யோகி பாபு நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபுவுக்கு ஃபிப் முதல் வாரம் திருமணம் நடைபெற இருக்கிறது என்று தகவல் பரவ. ஷூட்டிங்கிலிருந்த யோகிபாபுவுக்கு பலரும் தொடர்புக்கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, “என் திருமணம் பற்றி வந்த தகவல் தவறானது. என் திருமணத் தகவலை வெகு விரைவில் நானே அறிவிப்பேன். நன்றி” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.