Advertisment

நடிகை அஞ்சலி, யோகி பாபு இணைந்து நடிக்கும் புதுப்படம்!

yogi babu

ஜெய், அஞ்சலி இருவரையும் வைத்து சினிஷ் இயக்கிய படம் பலூன். 2017ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் வரவேற்பை பெறவில்லை. தற்போது இந்த படத்தின் இயக்குனர், பூச்சாண்டி என்னும் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

Advertisment

தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் சினிஷ் 'பூச்சாண்டி' என்கிற திரைப்படத்தை, சோல்ஜர்ஸ் ஃபேக்டரி என்கிற நிறுவனத்தின் பெயரில் தயாரித்துள்ளார். அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் சினிஷ் பகிர்ந்துள்ளார்.

Advertisment

இந்த போஸ்டரில் அஞ்சலி பேயாகவும், அவருக்குப் பின்னால் கையில் ரோஜாவோடு யோகி பாபு பேய் ஓட்டுபவரைப் போலவும் நிற்கிறார். இவர்களுக்கு மேல் பேய்கள் முன்னேற்றக் கழகம் என்கிற பலகை இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரேஷ்மா, 'விஜய் டிவி' ராமர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

Anjali yogi babu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe