bsgr

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் யோகி பாபு.சில மாதங்களுக்கு முன்பு, ஆரம்பகாலகட்டத்தில் தான் சிறு வேடமிட்டு நடித்த படங்களின் விளம்பர போஸ்டர்களில் நான் அப்படத்தின் கதாநாயகனாக நடித்ததுபோல் தற்போது சித்தரித்து வெளியிடுவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் அவரின் படங்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், இனி இதுபோன்ற காரியங்களில் ஈடுபடவேண்டாம் என அவர் அறிவித்திருந்த நிலையில், ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தெளலத்' பட போஸ்டர் நேற்று வெளியானது. இதில் யோகி பாபுவை மட்டும் மையப்படுத்தி போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகர் யோகி பாபு அந்த போஸ்டர் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என விளக்கம் அளித்துள்ளார்.