Advertisment

கையெழுத்திற்காக நடிக்க ஓகே சொன்ன யோகிபாபு

yogi babu about  dhoni

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் தமிழ்ப்படமாக 'லெட்ஸ் கெட் மேரீட்' (Lets Get Married - LGM) என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

Advertisment

காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு பேசிய யோகி பாபு, "கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருக்கும் எம்.எஸ்.தோனி தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒரு விஷயம். தோனி மற்றும் சாக்ஷி மேடத்துக்கு எனது நன்றி. முதலில் இயக்குநர் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தான் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை அணுகியபோது, நான் ஏதோ கிண்டல் செய்கிறார் என்று நினைத்தேன். பின்னர் தான் அவர் சொல்வது உண்மை என்பதே எனக்குப் புரிந்தது.

Advertisment

படத்தில் நதியா மேடம், ஹரிஷ் கல்யாண் போன்றோர் நடிப்பதால் மூவருக்குமான காட்சிகளில் சேர்ந்து நடிக்கும் போது தேதிகளில் குழப்பம் ஏற்படும் என்னால் தேதி ஒதுக்க முடியுமா என்று தெரியவில்லையே என்று சொன்னதற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, நீங்கள் இப்படத்தில் நடிக்க தேதி கொடுத்தால் நான் தோனி கையெழுத்துப் போட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை உங்களுக்கு வாங்கித் தருவேன் என்றார். நான் உடனே என் மேனேஜரைக் கூப்பிட்டு இவர் என்ன தேதி கேட்டாலும் கொடு என்று சொல்லிவிட்டேன்" என்றார்.

actor yogi babu Dhoni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe