YG Mahendran's request to the Chief Minister!

இளையராஜா இசையில் டி.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீ இராமானுஜர். ஆன்மீகத்தில் சமூகப் புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் டி.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Advertisment

இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒய்.ஜி.மகேந்திரன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.

Advertisment

ஒய்.ஜி.மகேந்திரன் பேசியதாவது “இந்தக் கால இளைஞர்களுக்கு இந்தப் படத்தை கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது. இதுவும் சீர்திருத்த படம்தான். இந்தப் படத்தை எல்லோரும் பார்க்கும் விதமாக தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும்; அனைத்து பள்ளிகளிலும் இந்த படம் திரையிட வேண்டும் என்று இந்த நேரத்தில் முதல்வருக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன்” என்றார்.