Advertisment

மனதை வருடும் ‘ஏழேழு மலை’ பாடல்; யுவன் இசையில் வெளியீடு!

yezhu malai yezhu kadal 2nd song released

Advertisment

கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குநர் ராம், தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். ‘வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்’ சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்த படம் சர்வதேச பல இடங்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வாங்கியுள்ளது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் காதலர் தினமான கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. ‘மறுபடி நீ...’ என்ற தலைப்பில் வெளியான இப்பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகள் எழுதியிருந்தார். இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான, ‘ஏழேழு மலை’ எனத் தலைப்பில் தொடங்கும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்த பாடலில் ‘நீரோடை முழுதும் உன் வேர்வைக் கயல்கள்... முட்புதரின் இடையில் உன் பார்வை முயல்கல்.. என்ற வரியும், ‘தனைக் கண்ட விழியைத் தொலைத்த ஓர் கனவாய்.. திசைக்கெட்டுத் தறிக்கெட்டு ஓடுகிறேன்...’ என அற்புதமான வரிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கேட்க முடிகிறது. இதன் மூலம் மதன் கார்க்கி தேர்ந்த பாடாலசிரியர் என்று மீண்டும் நிரூபித்துக்கிறார். மனதை வருடும் இப்பாடல் மீண்டும் மீண்டும் கேட்க கேட்க தூண்டுகிறது. முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கும் இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Xu4SReip1LY.jpg?itok=B8_Vq9Ib","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Yezhu Kadal Yezhu Malai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe