Advertisment

“எனக்கு 8,822 வயசு...” - சூரிக்கு ஷாக் கொடுத்த நிவின்பாலி

Yezhu Kadal Yezhu Malai Glimpse released

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான நிலையில் சமீபத்தில் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து வருகிற 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ள, ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. அதில் சூரியிடம் நிவின் பாலி தனது காதல் கதையை விவரிப்பது போல் அமைந்துள்ளது.

Advertisment

அப்போது அஞ்சலியை, நிவின் பாலிபார்த்த பொழுது, ராணியாக இருந்தார் என சொல்ல, உடனே சூரி, “அது எப்படி சார்...” என கேட்க, அதற்கு , “உன் வயசு என்ன” என கேட்டு “எனக்கு 8822” என கோவமாக கூறுகிறார். உடனே சூரி திகைப்புடன் நிவின் பாலியை பார்க்கிறார். இந்த காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்காத நிலையில் விரைவில் அறிவிப்பார்கள்என எதிர்பார்க்கபடுகிறது.

actor soori director ram Yezhu Kadal Yezhu Malai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe