Yezhu Kadal Yezhu Malai first single release update

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

Advertisment

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார்.

Advertisment

இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ‘மறுபடி நீ...’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளதாகப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடல் காதல் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பிரியாணி, அஞ்சான், வை ராஜா வை, மாநாடு உள்ளிட்ட சில படங்களில்யுவன் இசையில் மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார்.