Advertisment

'என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ennanga sir unga sattam

Advertisment

பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'என்னங்க சார் உங்க சட்டம்'. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே முடிவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது.

தற்போது இயல்புநிலை திரும்பி திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், சிறு படங்களுக்கான வரவேற்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை. இதைக் கவனத்தில் எடுத்த 'என்னங்க சார் உங்க சட்டம்' படக்குழு, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்து, சோனி லைவ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தப்படி, வரும் 29ஆம் தேதி 'என்னங்க சார் உங்க சட்டம்' திரைப்படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகவுள்ளது.

tamil cinema
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe