This year rajini birthday is a disappointment for his fans

இந்தியத்திரைத்துறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 169 படங்களில் நடித்துள்ள ரஜினி தனது 72வது பிறந்தநாளை இன்று (12.12.2022) கொண்டாடி வருகிறார். வழக்கமாக ரஜினியின் பிறந்தநாளன்று அவரது ரசிகர்கள் ரஜினியின் வீட்டின் முன்பு திரளாகக் கூடி ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவர். ரஜினியும் அவர்களது வாழ்த்தைப் பெற்று ரசிகர்களை மகிழ்விப்பார்.

Advertisment

அந்த வகையில் இன்றும் ரஜினியின் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் ரஜினியைச் சந்திக்க திரளாகக் கூடியிருந்தனர். ரஜினியைச் சந்திக்க ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இம்முறை ஏமாற்றம் தான். ஏனென்றால் ரஜினி வீட்டில் இல்லையென்றும், வெளியூரில் உள்ளார் என்றும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த்செய்தியார்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், "ரஜினி சார் ஊரில் இல்லை. அவர் சார்பாக எல்லாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தயவு செய்து யாரும் மழையில் காத்திருக்க வேண்டாம்.”

Advertisment

இது ரஜினியின் ரசிகர்களைசற்று சோகத்தில் ஆழ்த்தினாலும், ரஜினியின் பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதே போல் அவரது ரசிகர்கள் பல ஊர்களில் கேக் வெட்டியும்பட்டாசு வெடித்தும் கோலாகலமாகக் கொண்டாடினர்.