vijay sethupathi

Advertisment

பேட்ட படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் திரைக்கு வர தயாராக உள்ளது. தியாகராஜன் குமாரராஜா எட்டு ஆண்டுகள் கழித்து இயக்கும் இரண்டாவது படம் இது. இதில் விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை அடுத்து எஸ்.யு.அருண் குமார் இயக்கும் படமும் ஷூட்டிங் முடிவடைந்து, கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர்ராஜா இசை அமைக்கிறார். விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிந்துபாத் என்ற பெயரில் வெளியானது.

தென்காசி, மலேசியா, தாய்லாந்து ஆகிய இடங்களில் இந்த படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த படத்திற்கான டப்பிங் நடைபெற்று வருவதை சமூக வலைதளத்தில் விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார். இந்த திரைப்படம் வருகிற கோடைக்கால விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படங்களில்லாமல் மேலும் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம், மலையாளத்தில் மார்கோனி மாத்தாய் போன்ற பல படங்கள் இந்த ஆண்டே வெளியாக இருக்கிறது.