Advertisment

‘யாவரும் வல்லவரே’- ரிலீஸ் தேதி அறிவிப்பு

'Yavarum Vallavare' movie release date announcement

Advertisment

வரவேற்பை பெற்ற ‘வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் 11:11 புரொடக்‌ஷன் பிரபு திலக். தற்போது N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ எனும் புதிய படத்தை வழங்கவுள்ளார். இப்படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, அவர்களுடன் தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

11:11 புரொடக்‌ஷன் சார்பில் டாக்டர். பிரபு திலக் படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது, "’வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ படங்களின் பிரமாண்டமான வெற்றியை அடுத்து எங்களின் ’யாவரும் வல்லவரே’ படம் டிசம்பர் 29, 2023 அன்று வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது. இயக்குநர் N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி திரைக்கதையை கூறியபோது அவரது ஐடியாவும் படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு போன்ற திறமை மிக்க நடிகர்களும் இந்தப் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்” என்றார்.

yogi babu
இதையும் படியுங்கள்
Subscribe