திரையரங்கில் அடிதடி - தொண்டர்களால் பரபரப்பு

yatra 2 fans fight between jegam mogan reddy pawan kalyan

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'யாத்ரா 2' என எடுக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துளளார். இப்படம் இன்றுவெளியான நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்கள் திரையரங்கிற்கு வந்து மேளதாளத்துடன், வெடி வெடித்துக் கொண்டாடினர்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில், படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்களுக்கும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் கைகலப்பு ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின்‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு’ படம் கடந்த 7 ஆம் தேதி ரீ ரிலீஸாகியுள்ளது. இந்த சூழலில் இந்த தொண்டர்களின் அடிதடி சம்பவம் நடந்துள்ளதாகத்தெரிகிறது. இந்த சம்வவம் அப்பகுதியில் சற்றுபரபரப்பு நிலவியது.

CM JAGANMOHAN REDDY jiiva pawan kalyan
இதையும் படியுங்கள்
Subscribe