style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற 'கழுகு' படத்தின் இரண்டாம் பாகம் 'கழுகு 2'. கிருஷ்ணா - பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா. படத்தில் இன்னும் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பிரபலமாகியுள்ளார். 'சகலகலா வள்ளி' எனும் இந்தப்பாடல் 300 நடன கலைஞர்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா நடனம் அமைத்துள்ள இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/N2IiNy9DtIk.jpg?itok=xydqxu5z","video_url":"