Skip to main content

கழுகு 2 வில் ஆட்டம் போட்ட பிக்பாஸ் யாஷிகா வீடியோ வெளியீடு..!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
yashika

 

 

கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற 'கழுகு' படத்தின் இரண்டாம் பாகம் 'கழுகு 2'. கிருஷ்ணா - பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா. படத்தில் இன்னும் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பிரபலமாகியுள்ளார். 'சகலகலா வள்ளி'  எனும் இந்தப்பாடல் 300 நடன கலைஞர்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா நடனம் அமைத்துள்ள இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எஸ்.ஜே சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; புதிய போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

Release date announcement of SJ Surya film; The film crew released the new posters

 

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாகவும், ராதாமோகன் இயக்கும் 'பொம்மை' படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதனிடையே வெங்கட் ராகவன் இயக்கத்தில் 'கடமையை செய்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் 'கடமையை செய்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு, அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளது. 

 

 

 

Next Story

"எனக்கு லவ் எல்லாம் செட்டாகாது" - திருமணத்தை அறிவித்த யாஷிகா ஆனந்த்

Published on 01/04/2022 | Edited on 02/04/2022

 

Yashika announces his marriage

 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'சாம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் தற்போது குணமடைந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்ற செய்தியை உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு என் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இது செட்டில்ட் ஆக வேண்டிய நேரம். சினிமா எனக்கு பிடிக்கும், அதனால் உங்களை தொடர்ந்து மகிழ்விப்பேன். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், லவ் எல்லாம் செட் ஆகாது" எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். ஆனால் யாஷிகாவின் அடுத்த பதிவில், "வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்து எனக் கூறி, தற்போது எனக்கு திருமணம் இல்லை" எனத்  தெரிவித்துள்ளார்.