
'மாநாடு', 'பொம்மை' உள்ளிட்ட படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, அடுத்ததாக 'கடமையை செய்' என்ற புதிய படத்தில் நடிக்கிறார். 'முத்தின கத்திரிக்காய்' படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இயக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கவுள்ளார். நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.
'கடமையை செய்' படத்தினை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கபடக்குழு திட்டமிட்டுள்ளது.
Follow Us