ADVERTISEMENT

பிக்பாஸால் இதை இழந்தேன் ! - யாஷிகா ஆனந்த் 

06:43 PM Oct 05, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

'பிக்பாஸ்' புகழ் யாஷிகா ஆனந்த் நடித்த 'நோட்டா' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இப்படத்தில் நடித்தது குறித்து அவர் பேசியபோது... 'நோட்டா' படத்தில் நான் பிக்பாஸுக்கு முன்னாடியே கமிட்டாகி விட்டேன். இதில் என்னுடைய கதாபாத்திரம் அரை மணி நேரம் திரையில் வந்துபோகும் மாதிரியான கதாபாத்திரம். இருந்தும் நான் கமிட் ஆனது என்னவோ பெரிய கதாபாத்திரத்திற்காக தான். ஆனால் நான் பிக்பாஸில் இருந்ததால் படப்பிடிப்புக்குப் போக முடியவில்லை. அதனால் என்னுடைய கதாபாத்திரத்தை சிறு வேடமாக மாற்றிவிட்டார்கள். அரசியல் மூலமாக நம் நாட்டுக்கு என்ன தேவையோ, அதைச் செய்ய வேண்டும். ஆனால் அதை செய்யாமல் அரசியலை பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வியாபாரமாக தற்போது இருக்கும் அரசியல்வாதிகள் மாற்றிவிட்டார்கள். இப்படத்தில் இதையெல்லாம் எடுத்துச் சொல்கிற மாதிரியான கதாபாத்திரம்தான் என்னுடையது" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT