ADVERTISEMENT

கடவுளுக்கு நன்றி சொல்வதா? அல்லது குற்றம் சொல்வதா? - மருத்துவமனையில் யாஷிகா உருக்கம்!

11:23 AM Aug 03, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார், நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியதில், அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், விபத்திற்கு பிறகு கண்விழித்த நடிகை யாஷிகா முதல்முறையாக விபத்து குறித்து உருக்கமாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

"நான் தற்போது கடந்துகொண்டிருக்கும் வலியை என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. உயிர் பிழைத்ததற்காக வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்விலேயே இருக்கப் போகிறேன். எனக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்தக் கோரமான விபத்திலிருந்து என்னைக் காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நான் நன்றி சொல்வதா? அல்லது என் உயிர்த் தோழியை என்னிடமிருந்து பிரித்துச் சென்றதற்காக வாழ்நாள் முழுவதும் கடவுளைக் குற்றம் சொல்ல வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் செய்கிறேன் பவனி. நீ என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும். உன் குடும்பத்தை ஒரு மோசமான சூழ்நிலைக்குத் தள்ளிவிட்டுவிட்டேன்.

ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் செய்கிறேன் என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. இனி குற்றவுணர்விலேயே வாழப் போகிறேன். உன் ஆன்மா சாந்தியடையும் என்று நம்புகிறேன். நீ என்னிடம் திரும்பி வர பிரார்த்திக்கிறேன். ஒருநாள் உன் குடும்பம் என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். நம் நினைவுகளை நான் என்றென்றும் போற்றுவேன். எனது பிறந்தநாளை நான் கொண்டாடப் போவதில்லை. என் ரசிகர்களையும் எனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்; தயவுசெய்து அவளுடைய குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் அவர்களுக்கு அதிக வலிமையைக் கொடுக்க வேண்டும். என் வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பு இது. தயவுசெய்து ஒருநாள் என்னை மன்னித்துவிடு. ஐ மிஸ் யு!" என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT