Advertisment

'என்னை ஒரு இளைஞர் பாலியல் ரீதியாகச் சீண்டினார்' - #MeeToo வில் 'பிக்பாஸ்' யாஷிகா ஆனந்த்

yashika

Advertisment

'இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் 'மீடூ' குறித்து தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். அதில்... #MeeToo இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்கும் இந்தப் பாலியல் தொல்லை நடந்திருக்கிறது. நான் பட வாய்ப்பு கேட்டு செல்லும் சமயத்தில் எனது ஆடையைச் சரிசெய்வது போலவும், முத்தக் காட்சியில் நடிக்கச் சொல்லித்தருவது போலவும் என்னிடம் சிலர் தவறாக நடந்து கொண்டனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதுதவிர பொதுவெளியில் ஒரு இளைஞர் என்னை பாலியல் ரீதியாகச் சீண்டினார். என் வீடு அருகே இருந்த போலீஸ்காரர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அணுக முயற்சி செய்தார். சில மாதங்களுக்கு முன் சாலையில் நின்ற பெண் ஒருவரிடம் போலீசார் ஒருவர் என்ன ரேட் எனக் கேட்கும் வீடியோ வெளியானது. அந்தப் பெண் வேறு யாரும் அல்ல நான் தான். காவல் துறையிலும் சில மோசமானவர்கள் இருக்கிறார்கள். சில போலீசார் கூட என்னைத் தவறான கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைத் துணிந்து வெளியில் சொல்லி தவறானவர்களை அடையாளம் காட்டும்போதுதான் பாலியல் தொல்லைகள் குறையும்" என்றார்.

metoo yashika anand
இதையும் படியுங்கள்
Subscribe