எல்.கே.ஜி படத்தை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி நடித்து இயக்கியுள்ள படம் முக்குத்தி அம்மன். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisment

nayanthara

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஏற்கனவே ஆர்.ஜே. பாலாஜியை வைத்து எல்.கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனம்தான் முக்குத்தி அம்மன் படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான அட்வான்ஸை எல்.கே.ஜி படம் முடிவடைந்தபோதே கொடுத்துவிட்டதாக பாலாஜி இப்படம் குறித்து அறிவிப்பு வெளியான சமயத்தில் தெரிவித்தார்.

Advertisment

முக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் எல்.கே.ஜி படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய என்.ஜே. சரவணன் ஆகிய இருவரும் இணைந்து இயக்குகின்றனர். கதை மற்றும் திரைக்கதையை தனது நண்பர்களுடன் இணைந்து ஆர்.ஜே. பாலாஜியே எழுதியுள்ளார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்றது.

இந்த படத்தில் இந்துதாஜா நடித்திருப்பதாக முன்பு தகவல் வெளியானது. அதேபோல பிக்பாஸ் 2வில் பங்குபெற்ற யாஷிகா ஆனந்தும் படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் சம்மரில் பட்த்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.