பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் தற்போது 'ஜாம்பி' படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் புவன் இயக்கும் இந்த படத்தில் யோகிபாபு, மனோபாலா, கோபி, சுதாகர் ஆகியோரும் நடிக்கின்றனர். கதாநாயகன், கதாநாயகி இல்லாத நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்தில் யாஷிகா ஆனந்த் வில்லன்களை போட்டு புரட்டி எடுக்கும் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். யாஷிகா நிஜமாகவே கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றவர் என்பதால் கராத்தே சண்டையை இப்படத்தில் பயன்படுத்தி உள்ளனர். மேலும் சண்டை போடும் காட்சிகளில் டூப் போடாமல் யாஷிகாவே நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஷூட்டிங்கில் நிஜ சண்டை போட்ட பிக்பாஸ் யாஷிகா!
Advertisment