/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/230_6.jpg)
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'சாம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் தற்போது குணமடைந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
அந்தவகையில் நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று (9.3.2022) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்ளின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களை முதன் முதலில் நிர்வாணமாக பார்த்த அதிர்ஷ்டசாலி யார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நடிகர் யாஷிகா ஆனந்த்," டாக்டர் என நினைக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார். ரசிகரின் இந்த ஏடாகூடமான கேள்விக்கு கூலாக பதிலளித்த யாஷிகாவின் இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)