Advertisment

"எனக்கு லவ் எல்லாம் செட்டாகாது" - திருமணத்தை அறிவித்த யாஷிகா ஆனந்த்

Yashika announces his marriage

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'சாம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் தற்போது குணமடைந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த்தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்ற செய்தியை உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு என் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இது செட்டில்ட் ஆக வேண்டிய நேரம். சினிமா எனக்கு பிடிக்கும், அதனால் உங்களை தொடர்ந்து மகிழ்விப்பேன். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், லவ் எல்லாம் செட் ஆகாது" எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். ஆனால் யாஷிகாவின் அடுத்த பதிவில், "வாழ்த்துச்சொன்னஅனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்து எனக் கூறி, தற்போது எனக்கு திருமணம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

Yashika Aannand yashika anand
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe