/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/300_49.jpg)
நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது நண்பர்களுடன் காரில் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்தார். அப்பொழுது நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. காரை ஓட்டிய யாஷிகாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆனால் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து காரணமாக அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நடிகை யாஷிகா ஆனந்த் மீது மகாபலிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 21 ஆம் தேதி (21.03.2023) யாஷிகா நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் யாஷிகா நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும் வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் இன்று (25.04.2023) நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இன்று ஆஜராகாவிட்டால் அவரை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனிடையே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் கடந்த மாதம் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்டை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தளர்த்தியது. மேலும் முன்பு கூறியது போல் இன்று ஏப்ரல் 25ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று மீண்டும் நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜராகியுள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் வருகிற ஜூலை மாதம் 27 ஆம் தேதி மீண்டும் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)