Yash toxic movie birthday wish video

'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு ஒரு மோஷன் போஸ்டர் வீடியோவுடன் வெளியானது. அதில் படத்திற்கு ‘டாக்சிக்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது தள்ளி போகவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி மும்பை, கர்நாடகா என பல்வேறு இடங்களில் நடந்தது.

Advertisment

இந்த நிலையில் இன்று யஷ் பிறந்தநாள் காண்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் போதைப்பொருள் மற்றும் மது அருந்தும் கிளப்பிற்கு யஷ் செல்லும் காட்சி இடம் பெறுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.