/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/363_1.jpg)
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'.இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத்தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் கடந்த 14ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியானது.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் வசூல் ரீதியாக பல சாதனைகளையும் படைத்தது வருகிறது. இதன் மூலம் யாஷ் முன்னணி நடிகர் அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் யாஷ் அளித்துள்ளபேட்டியில், "நான் சினிமா பின்னணியில் இருந்து வரவில்லை. சினிமா மேல் இருந்த ஆசையால்கையில் ரூ.300 உடன் வீட்டில் இருந்துவெளியேறி நடிப்பதற்காக பல சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கினேன். அதன் பின்பு கிடைத்த சிறிய வாய்ப்புகளை பயன்படுத்தி துணை நடிகர், கதாநாயகன் என்ற பல படங்களில் நடித்தேன். கே.ஜி.எஃப் படத்திற்கு பிறகு தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டுள்ள யாஷ், "தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். நான் இப்போது இருக்கும் நிலைமைக்குநன்றி சொன்னால் மட்டும் போதாது. அளவில்லா அன்பை அள்ளிக் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி " எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)