/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/97_29.jpg)
கன்னட திரையுலகில் 'கே.ஜி.எஃப்' மற்றும் 'காந்தாரா' உள்ளிட்ட படங்கள் இந்தியா முழுவதும் கவனம் பெற்றது. அந்த படத்தின் மூலம் பிரபலமான யஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும் மறைந்த புனீத் ராஜ்குமாரின் மனைவி அஷ்வினி, தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் உடன் இருந்தனர்.
பெங்களூர்ராஜ்பவனில் நடைபெற்ற இந்தசந்திப்பில் சினிமா, கர்நாடகாவின் கலாச்சாரம், பண்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அதோடு கிரிக்கெட் வீரர்கள்அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் மோடியை சந்தித்துள்ளனர்.
யஷ், 'கே.ஜி.எஃப் 2' படத்தை தொடர்ந்து நார்தன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகச்சொல்லப்படுகிறது. ரிஷப் ஷெட்டிகாந்தாரா பட வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)