Advertisment

தொடரும் ராமாயண கதை - ராவணனாகும் ராக்கி பாய்?

Yash to play Raavan in Ramayana under Nitesh Tiwari direction

ராமாயணக்கதையைக்கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் முன்னரேவெளிவந்துள்ளன. இருப்பினும் தற்போது3டி தொழில்நுட்பத்தில்ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாகவைத்துஇந்திமற்றும் தெலுங்கில்வருகிற ஜூன் 16 ஆம் தேதிவெளியாகவுள்ளது 'ஆதிபுருஷ்'. இப்படத்தில்பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது.

Advertisment

இதனிடையே 2019 ஆம் ஆண்டு,மது மன்டனாதயாரிப்பில்நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில்ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில்ராமர்கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

Advertisment

இந்த நிலையில் ராவணன் கதாபாத்திரத்தில்கே.ஜி.எஃப் யஷ்-ஐநடிக்கவைக்க படக்குழு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் யஷ் தரப்பு என்ன பதிலளித்துள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

yash
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe