/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/263_6.jpg)
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து 'தளபதி 67' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாகவும், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடிப்பதாகவும்நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ், அவர் இயக்கியபடத்தின் கதையை விக்ரம் கதையுடன் தொடர்பு படுத்திஒரு யுனிவர்ஸைஉருவாக்கியிருந்தார். அதனைரசிகர்கள் 'லோகேஷ்சினிமாட்டிக் யுனிவர்ஸ்' எனக் குறிப்பிட்டு வரும் நிலையில்'தளபதி 67' படமும் அந்தபாணியில் இருக்குமாஎன்றகேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தென்னிந்திய அளவில் லோகேஷ் கனகராஜைதொடர்ந்து தற்போது கே.ஜி.எஃப் படபுகழ் இயக்குநர்பிரஷாந்த்நீலும்அவரது வரும் படங்களில் புதுயுனிவர்ஸ் உருவாக்கியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. பிரஷாந்த்நீல், தற்போது பிரபாஸை வைத்து 'சலார்'படத்தை இயக்கி வரும் நிலையில், கேஜிஎஃப்கதையையும் சலார் கதையையும் தொடர்புப்படுத்திஒரு புது யுனிவர்ஸைஉருவாக்கியுள்ளாராம். அதனால் ராக்கி பாய் கதாபாத்திரம் இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் வருவதால், யஷ் அதில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பிரபாஸையும்யஷ்ஷையும்ஒரே திரையில் காண அவர்களதுரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
'சலார்' படத்தில்பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரிவித்ராஜ் வில்லனாக நடிக்கும் இப்படம் பெரும் பொருட் செலவில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.'லோகேஷ்சினிமாட்டிக் யுனிவர்ஸ்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் 'பிரஷாந்த்சினிமாட்டிக் யுனிவர்ஸ்' எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பதைப் பார்க்க கன்னட மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)