Advertisment

சினிமா தொழிலாளர்கள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் 'கே.ஜி.எஃப்' யாஷ்! 

bdbfsbfxb

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு, படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், திரையுலகில் பணிபுரியும் தினசரி திரைப்பட தொழிலாளர்கள் பலரும் படப்பிடிப்புகள் இல்லாமல் வேலை, வருமானமின்றி வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தொழிலாளர்களுக்குத் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் தங்களால் ஆன உதவிகளை செய்துவருகின்றனர். அந்தவகையில் கன்னட சினிமாவில் வேலையின்றி கஷ்டப்படும் தினசரி தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு ‘கே.ஜி.எஃப்’ புகழ் நடிகர் யாஷ் பணம் அனுப்ப முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்....

Advertisment

"நாடு முழுவதும் கணக்கிலடங்கா நபர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக கோவிட் தொற்று உள்ளது. எனது சொந்த கன்னடத் திரைத்துறையும் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாம் இருக்கும் இந்த மோசமான காலகட்டத்தை மனதில்கொண்டு எங்கள் திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3,000 உறுப்பினர்களுக்கு, எனது சொந்தச் செலவில் தலா 5 ஆயிரம் ரூபாயை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளேன். இந்தச் சூழலால் ஏற்பட்டிருக்கும் வலி மற்றும் இழப்புக்கு இது தீர்வாகாது என்பது எனக்குத் தெரியும். இது நம்பிக்கைக்கான கீற்று. நல்ல காலம் பிறக்கும் என்பதற்கான நம்பிக்கை" என கூறியுள்ளார்.

Advertisment

yash
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe